இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8ஆவது நாளாக தொடர்கின்றது.
தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள நிலையிலும் அவரது போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் கூட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.