இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக்கோப்பை சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இந்திய அணி ரிஷப் பாண்ட்டின் அதிரடி சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின்(96 நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தால், 365 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் 160 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இங்கிலாந்து அணி, இந்தியாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 135 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகி, 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திதது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டான் லாரன்ஸ் 50 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 5 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்று முன்னிலை வகித்து தொடரைக் கைப்பற்றியதுடன், இதன் மூலம் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்ற நிலையில், இந்தியா இப்போது தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.