எதிர்வரும் 15ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய மேல் மாகாணத்திலும் பாடசாலைகளை திறப்பதற்கு சுகாதார பணிப்பாளரிடம் அனுமதி கோரியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலை திறக்கும் போது 5, 11 மற்றும் 13ஆம் வகுப்புகள் ஆரம்பித்த பின்னர் ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.