பிரித்தானியா அரச குடும்பம் குறித்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் குற்றம்சாட்டியது தொடர்பில் நாட்டின் குழந்தைகள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
Oprah Winfrey உடனான இளவரசர் ஹரி-மேகன் தம்பியின் நேர்காணல் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்டது.
நேர்காணலில் அரச குடும்பம் குறித்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் சரமாரியாக குற்றம்சாட்டியது சர்ச்சயை கிளப்பியுள்ளது.
பிரித்தானியா அரச குடும்ப உறுப்பினர் ஒருவர், தங்கள் மகனின் தோல் நிறம் எவ்வளவு கருப்பாக இருக்கக்கூடும் என்ற கவலையை எழுப்பியதாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன் குற்றம் சாட்டினார்.
மேகனின் குற்றச்சாட்டை அடுத்து, எங்கள் சமூகத்தில் இனவெறிக்கு முற்றிலும் இடமில்லை என்று பிரித்தானியா குழந்தைகள் அமைச்சர் Vicky Ford கூறினார்.
இருப்பினும் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்ட நேர்காணலை பார்க்கவில்லை என Vicky Ford கூறினார்.