கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறையில் நபிகள் நாயகத்தின் காரட்டூன்களை காட்டியதற்காக ஆசிரியர் சாமுவேல் பாட்டி தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரியரை கொன்ற 18 வயதான Abdullakh Anzorov என்ற இளைஞனை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.
13வது பள்ளி மாணவி ஒருவர், நபிகள் நாயகத்தின் கார்ட்டூகளை போது முஸ்லிம் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு பாட்டி கூறியதாக அவரத தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் தந்தை சட்டப்படி பாட்டி மீது புகார் அளித்தார், அதுமட்டுமின்றி சம்பவம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக இணையத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
பாட்டி கொல்லப்பட்ட பிறகு நடந்த விசாரணையில், இணையத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கும் பாட்டி கொலைக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து, பள்ளி மாணவி மீது அவதூறு குற்றச்சாட்டும், அதே நேரத்தில் அவரது தந்தை மற்றும் இஸ்லாமிய போதகர் மீத கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் குறித்து பொய்யான மற்றும் தவறான கூற்றுகளை பரப்பியதாக தற்போது பள்ளி மாணவி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
மாணவி பொய் சொன்னார், ஏனென்றால் உடன் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாக பேசுமாறு கேட்டுக் கொண்டதால், அவர் இந்த பிரச்சினையில் சிக்கியிருப்பதாக உணர்ந்தார் என்று அவரது வழக்கறிஞர் Mbeko Tabula தெரிவித்தார்.