மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்குமாருக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் சென்னை ரைஃபிள் கிளப் அணிக்காக நடிகர் அஜித்குமார் 6 பதக்கங்களை வென்றார்.
இதையடுத்து அஜித்தை பல்வேறு அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அஜித்தை வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில், சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.
இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!
சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
(1/3) pic.twitter.com/cieh0REJcn
— சீமான் (@SeemanOfficial) March 8, 2021