கலகலப்பு’ நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். அதோடு சில குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
சுந்தர்.சி-யின் `கலகலப்பு’ திரைப்படத்தில் `பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கோதண்டராமன் அடுத்தடுத்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.