சமீப காலமாக பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி வைரலாகி வரும் நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என படங்களில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் விரும்பும் கார் ஓட்டப் பந்தயத்தில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
கார் ஓட்டப பந்தயங்கள் சம்மந்தமான புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் சமூக வலைதளங்களில் அண்மை நாட்களாக மிகவும் வைரலாகி வரும் வீடியோ என்றால் அது கடவுளே அஜித் என்பதாக தான் இருக்க முடியும்.
தல என்று ரசிகர்கள் அழைப்பதையே ஏற்காத அஜித், கடவுளே என்று அழைப்பதை எப்படி அவர் ஏற்பார். வாழு, வாழ விடு என்று எப்போது தனக்கென பாதையில் நடந்து வரும் தற்போது கடவுளே என்று ரசிகர்கள் அழைப்பதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அஜித் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.