பிரித்தானியாவில் தனி நபர் ஒருவர் தனக்கு பிடித்த சாண்ட்விச் உணவை வாங்கிச் செல்ல 135 கிலோமீட்டர் ஹெலிகாப்டரில் பறந்து வந்த சம்பவம் வியப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இணையத்தியல் வைரலாகிவரும் ஒரு வீடியோ, ஒரு பிடித்த உணவை வாங்க ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பதற்கு புதிய எடுத்துக்காட்டாக அமைந்து வருகிறது.
அந்த நபர் Greater Manchester-லிருந்து Lancashire-ல் உள்ள Chipping Farm Shop என்ற சாண்ட்விச் கடைக்கு வந்து ‘roast beef in caramelised onion gravy barm’ எனும் சாண்ட்விச்சை வாங்கிச் சென்றுள்ளார்.
இதனை, Chipping Farm Shop உணவகம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளது.
மேலும், இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர்வினை கருத்துக்களை பெற்றுவருகிறது. ஏனெனில், சிலர் அந்த நபரை ஊரடங்கு விதிகளை மீறியதாக விமர்சிக்கிறார்கள். ஆனால் பலரும் தங்களால் இதேபோன்று சாண்ட்விச்சை வாங்க முடிவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், இந்த நபர் கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிகளை மீறியதாகத் தெரிகிறது என்பதால் இந்த சம்பவம் இப்போது உள்ளூர் அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறது.
View this post on Instagram