தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய இருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரால் ர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.
10 இலட்சம் ரூபா கப்பம்
கடந்த 4ஆம் திகதி களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.
அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்படி, இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (22) காலை கிரிபத்கொடை, தலுகம பிரதேசத்திலும், பேலியகொடை, பட்டிய சந்தி பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.