குருணாகல், தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
தனது மனைவி வெளிநாட்டிற்கு செல்ல தயாரானதால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சானக மதுஷன் என்ற 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு 7 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளை உள்ள நிலையில், மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராகியுள்ளது.
இதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இது தொடர்பில் தம்பகல்ல பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து 25 மீற்றர் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் இளைய சகோதரன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக அவரது மூத்த சகோதரர் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் விசாரணையில், உயிரிழந்த இடத்தில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் பூச்சிக்கொல்லி மருந்து போத்தலை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.