கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பத்தர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிறந்தநாள் தினமான நேற்று வீட்டில் நின்ற குடும்பஸ்தரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்திடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துசியந்தன் (வயது 32) என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்தடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.