அமமுக வேட்பாளரின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் போட்டியிடுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதால், தனி ஒருவனாக தினகரன் களம் இறங்கியுள்ளார்.
இவர் எப்படியும் சென்னை ஆர்.கே.நகரில் தான் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்றும் அதிமுக-வில் சீட் கிடைக்காததால், டிடிவி தினகரனை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுக சார்பில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதே போன்று வெளியாகியுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 31 தொகுதிகள் பற்றிய வேட்பாளர்கள் தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல்! pic.twitter.com/cgcTNqnkHS
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021