டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் ஒரே நாளில் 25.1 பில்லியன் டொலர் லாபம் ஈட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
உலகில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த முதல் 10 மிகப்பெரிய செல்வந்தர்கள் ஒரே நாளில் மொத்தமாக 54 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட பாதியை ஒரே நபராக எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Tesla Inc. நிறுவனத்தின் மதிப்பு 20% உயரந்ததே இதற்கு காரணம். இந்த 20% என்பது ஒரு வருடம் முழுக்க கிடைக்கக்கூடிய வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 174 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட அமேசான் நிறுவனர் Jeff Bezos-ன் சொத்து மதிப்பை நெருங்கியுள்ளது.
இருப்பினும் Jeff Bezos 179.9 பில்லியன் டொலருடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ஜனவரியில், எலான் மஸ்க் 210 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தைப் பிடித்தார், ஆனால் Teslaவின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பின் பங்குகள் 36% குறைந்ததால் மீண்டும் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.