வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும்.
தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.
நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
எனவே இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- வாய்ப்புண்களுக்கு ஒரு சிட்டிகை தேனில் சிறுதளவு மஞ்சள் சேர்த்து பயன்படுத்தி வாருங்கள். இது உங்க வாயைச் சுற்றி இருக்கும் புண்களை குணப்படுத்த உதவுகிறது. இதை ஒரு நாளைக்கு 3-4 தடவை தடவி வாருங்கள்.
- ஒரு அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளே செய்யுங்கள். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்து வரும் போது நீங்கள் நன்மையை பெற முடியும்.
- வாயைச் சுற்றி இருக்கும் புண்களின் வலியை குறைக்க கற்றாழை ஜெல்லை அந்தப் பகுதியில் தடவி வாருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைச் செய்யும் போது நீங்கள் நன்மையை பெற முடியும். கற்றாழை ஜெல்லை மட்டுமே பயன்படுத்துங்கள். கற்றாழை சாற்றை பயன்படுத்தாதீர்கள்.
- வாய்ப்புண்களில் இருந்து வலி நிவாரணம் பெற சில துளசி இலைகளை வாயில் போட்டு மென்று விட்டு வாயை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள். இது உங்க வாய்ப்புண் வலியை குறைக்க உதவி செய்யும். உங்களுக்கு துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால் வெந்தய இலைகளைக் கூட நீர் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு வாயை ஒரு நாளைக்கு 2 -3 தடவை கொப்பளியுங்கள்.
- உங்க வலியை குறைக்க ஆப்பிள் சிடார் வினிகருடன் தண்ணீர் கலந்து வாயை கொப்பளியுங்கள். இது உங்க வலியை குறைக்க உதவி செய்யும்.
- உங்க வாய்ப் புண்ணை ஆற வைக் உப்பு நீர் உதவுகின்றது. மற்றும் பாக்டீரியாக்களை குறைக்கவும் உதவுகிறது. கெட்ட சுவாசத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை போக்க உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயைக் கழுவுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வாருங்கள்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் பற்பசையை பயன்படுத்தும் போது அதை குளிர்விக்க டூத்பேஸ்ட் உதவுகிறது. எனவே ஒரு ஏர் பட்ஸை கொண்டு டூத்பேஸ்ட்டை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளே செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என இதை செய்து வாருங்கள். நன்மை கிடைக்கும்.
- பூண்டில் இயற்கையாகவே அல்லிசன் என்று பொருள் இருப்பதால் வாய்ப்புண்களால் ஏற்படும் வலியை குறைக்க பயன்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை என பூண்டு பற்களை எடுத்து வாய்ப்புண் பகுதியில் தடவி வாருங்கள்.
- வாய்ப்புண்ணை சமாளிக்க அதிமதுரப்பொடியை பயன்படுத்துங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் அதிமதுரப் பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேன் சேர்த்து தடவி வாருங்கள்.
- உங்கள் வாய்ப்புண் அல்சரை குணப்படுத்த உதவுகிறது. எனவே ஆரஞ்சு பழச்சாறு குடிப்பது உங்க வாய்ப்புண்ணை போக்க உதவி செய்யும்.