2025 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி நோய் இல்லாமல் வாழ முயற்சிப்பது நமது கடமையாக பார்க்கப்படுகின்றது.
சீரான உணவு, லேசான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் சமூக உறவுகளைப் பேணுவதன் மூலம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம்.
2018 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் மக்கள் தவறான உணவுப் பழக்கத்தால் தன்னுடைய வாழ்க்கையை இழக்கிறார்கள்.
அதில், உணவில் அதிக உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது ஆகியன அடங்கும்.
இதன்படி, நாம் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் கொட்டைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி வீக்கங்களை குறைக்கிறது. இதனால் உயிர் ஆபத்துக்களும் குறைவாக இருக்கிறது.
அந்த வகையில் மோசமான நோய் நிலைமைகளை எப்படி தடுக்கலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
லேசான உடற்பயிற்சி
வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடு செய்து வருபவருக்கு சுமாராக 3.4 ஆண்டுகள் வரை ஆயுள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
இதுவரையில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், தினமும் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்ற லேசான உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிப்பது சிறந்தது.
இது தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இது போன்ற பழக்கங்கள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.
2. நல்ல தூக்கம்
இன்றைய வாழ்க்கை முறையில் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது சிறந்தது. பலரும் 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்கள், இதனால் இதய ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
7 முதல் 9 மணி நேரம் தூங்கினால், நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அத்துடன் மூளை நச்சுத்தன்மையிலிருந்து விடுபட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வேலையை செய்கிறது. மேலும் நமது ஹார்மோன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3. சமூக உறவுகளை பேணுதல்
தற்போது தனிமை இறப்பு அபாயத்தை 26 சதவீதம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் நல்ல சமூக உறவுகள் மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலம் வாழவும் உதவியாக இருக்கிறது.
சமூகத்திலும் குடும்பத்திலும் மற்றவர்களுடன் இணைந்து வாழும் நபர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.