பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சக போட்டியாளர்களின் பேச்சால் சௌந்தர்யா கண்கலங்கி அழுதுள்ள சம்பவம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
கடந்த தினங்களில் ராணவ் மற்றும் மஞ்சரி இருவர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் யார் வெளியேறுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், சௌந்தர்யா Life-ல எப்படித்தான் மேல வர்றதுனே தெரியலை? என்று கேள்வியுடன் கண்கலங்கி அழுதுள்ளார்.
சௌந்தர்யாவிற்கு வெளியே ப்ரொமோஷன் டீம் நன்றாக வேலை செய்து வருவதாக, முத்து, பவித்ரா, ஜாக்குலின் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.