2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டு கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி சுட்டிக்காட்டினார்.
அதன் கீழ், 6,459 விவசாயிகளுக்கு 5,246 ஏக்கருக்காக 100 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பயிர் சேதம் பரிந்துரைக்கப்பட்ட பின்னரும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காவிட்டால், மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது.
இழப்பீட்டை வழங்கி நிறைவு செய்யப்படாத மாவட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி மேலும் குறிப்பிட்டார்.