பிரபல ஐரோப்பிய நாடான நெதர்லாந்து ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
மார்ச் 29ம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் எனவும், பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாவதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நார்வேயில் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட முதியவர்களுக்கு இரத்தம் உறைவதாக வெளியான அறிக்கையை அடுத்து சமீபத்தில் ஐயர்லாந்தும் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்தது.
ஆனால், இரத்த உறைதலுக்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்த உறைதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஐரோப்பிய மருத்துவ ஆணையம், தடுப்பூசியின் நன்மைகள் அதன் அபாயங்களை விட அதிகமாக உள்ளன என குறிப்பிட்டுள்ளது.
டென்மார்க், நார்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து மற்றும் தாய்லா்நது ஆகியோ நாடுகள் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்துவதை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளன.