வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது.
கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து குறித்த குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.