நாட்டில் 2 கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.
இதன்படி கொவிட்-19 நோயினால் நாட்டில் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியானவர் என கண்டறியப்பட்டதை அடுத்து, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், தீவிர கொவிட் நியூமோனியா நிலைமையால் கடந்த 15 ஆம் திகதி அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியானவர் என கண்டறியப்பட்hர்.
இதையடுத்து, கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார்.
இதய நோய், கொவிட் நியூமோனியா, உயர் குருதி அழுத்தம், தீவிர நீரிழிவு நோய் மற்றும் சீறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















