இந்தியாவில் தாயை மகன் ஒரே அடித்துக் கொன்ற வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த வீடியோவை Saahil Murli Menghani என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த சம்பவ்ம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் தன் மனைவியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
https://twitter.com/saahilmenghani/status/1371854605102022664
அப்போது தாயுடன் வாக்குவாதம் முற்றியதால், கோபமடைந்த அந்த நபர் தன்னுடைய கையால் பலமாக அவரை தாக்குகிறார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழ, இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருமகள், அவரை எழுப்ப முயற்சிக்கிறார். இருப்பினும் அவர் எழும்பாத காரணத்தினால், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.