வவுனியாவில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் உடைமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் பிற்பகல் வவுனியா – நெளுக்குளம் மற்றும் குகநகர் பகுதிகளில் வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் சிறுசிறு பொதிகளாகக் கஞ்சா மற்றும் ஹெரோயின் உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 27,28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.