வட மாகாணத்திற்குரிய காணிகளின் உறுதிப்பத்திரங்களை மீண்டும் எடுத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார்.
கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் வைத்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது விரைவாக செயற்பட்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இது தொடர்பில் பேசிய நிலையில் குறித்த ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கே கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்துள்ளார்.