சினிமாவில் நடிகைகளுக்கு தங்களின் மார்க்கெட் போகாமல் இருக்க இளமையுடன் இருந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவார்கள். இதற்கு முன்னணி நடிகைகள் மட்டும் இல்லாது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் கூட உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவார்கள்.
ஆனால் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் இன்னும் இளமையுடன் இருந்து வருவார்கள். அதன் வரிசையில் 80, 90களில் தென்னிந்திய சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி படையப்பாவில் ஆரம்பித்து பாகுபலி படம் வரை பிரம்மாண்ட நடிகையாக திகழ்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நீலம்பரியாக இருந்த இவர் ராஜமாதா வாக புகழ் பெற்றவர்.
இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை.
வெள்ளித்திரையில் படங்களில் நடித்தும் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்த்ம் ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றி வருகிறார்.
என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான். நடிப்பில் தான் அப்படி என்றால் கவர்ச்சியிலும் அப்படி தான் போல் உள்ளது.
50 வயதான நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் செல்ஃபி எடுத்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.




















