இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியானது வெறும் நான்கு பந்துகளில் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் உள்ளூர் மூத்த மகளிர் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் சீனியர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் மும்பை, நாகாலாந்து அணிகள் மோதின.
இதில் மும்பை மகளிர் அணிக் கேப்டன் சயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
வீராங்கனைகள் கிக்கியாங்கலா (0), ஜோதி (0), கேப்டன் சென்டிலிம்லா (0), இலினா (0) ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. தொடர்ந்து மற்றவர்களும் சிறப்பாக சோபிக்கவில்லை.
அதிகபட்சமாக சரிபா 9 ரன்கள் எடுத்தார். இதனால், நாகாலாந்து அணி மொத்தம் 17 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மும்பை மகளிர் அணிக் கேப்டன் சயாலி சட்ஹெர் 8.2 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.
அடுத்துக் களமிறங்கிய மும்பை அணியில் துவக்க வீராங்கனைகள் இஷா ஓஷா, ருஷாலி பகத் ஆகியோர் நான்கு பந்துகளில் வெற்றி இலக்கை (18) அடைந்து, அணிக்கு பத்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.
இதன் மூலம் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் நான்கே பந்துகளில் மும்பை அணியில் வெற்றி இலக்கை அடைந்துள்ளனர்.