நாட்டில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி, முதலாவது தடவை செலுத்தப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் 29 ம் திகதி முதல் இரண்டாவது தடவை செலுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29ம் திகதி, முதல் தடவை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, ஏப்ரல் 29ம் திகதி அளவில் இரண்டாவது தடவை தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்தநிலையில் முதல்முறை தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் முறை செலுத்துவதற்காக ஒரு தொகை தடுப்பூசிகளை ஒதுக்குவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில், 10 முதல் 12 வாரங்களுக்கு இடையிலேயே இரண்டாம் முறை தடுப்பூசியை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டாம் கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



















