பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டிற்கு விஜய்யின் தந்தை மூலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரை விஜய்யின் தந்தை மற்றும் அம்மா ஷோபா நேரில் வரவழைத்து சந்தித்து இருந்தனர்.
மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேம் தான் என்னை பரிந்துரை செய்தார்.
அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்தும் கொரோனா ஊரடங்குக்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது.
ஆனால் இந்த கொரோனா வந்து மாற்றி விட்டது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கொரோனாவிற்கு பின் எந்த அப்டேட்டும் வரல, எது என்னவோ நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார்.




















