ஈழத்தமிழர்கள் பற்றி இந்திய திரையுலகில் முன்னனி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் நிலைப்பாடு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய குடியுரிமை விரும்பும் ஈழஅகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
தாயகம் திரும்ப விரும்புவோருக்கு அதற்குரிய வசதிகள் செய்யப்பட வேண்டும்.
சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் மூடப்பட வேண்டும்
புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
ஈழ தேசம் அமைவது அவசியம்.
கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருக்கும் மேற்கண்ட வாக்குறுதிகள் பெரும்பாலான மற்ற தமிழகக் கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன.
ஆனால் கமலஹாசன் அவர்கள் இன்னும் மேலதிகமாக ஈழத் தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
பொதுவாக கமலஹாசன் அவர்கள் பேசுவது புரியாது என்பார்கள். இன்னும் சிலர் அவர் பேசுவது அவருக்கே புரியாது என்றும் கிண்டல் செய்வார்கள்.
ஆனால் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் எப்படி இந்தளவு தெளிவாக கூறுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஏனெனில் பாஜக வும் சரி காங்கிரஸ் கட்சியும் சரி எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஈழத் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பார்கள்.
ஆனால் ஆட்சியில் ஏறியதும் இவை இரண்டுமே ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்து வருகின்றன். இதற்கு முக்கிய காரணம் இந்திய வெளியுறவுக் கொள்கையாகும்.
எனவே ஈழத் தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றப்பட வேண்டும் என்ற கமலஹாசன் அவர்களின் கோரிக்கை வரவேற்கப்பட வேண்டியதே. என சமூக ஆர்வலர் தேழர் பாலன் அவர் மூகநூலில் குறித்த கருத்துகளை பதிவிட்டுள்ளார்.