நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களால் இடம்பெற்ற விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் 08 மரணங்கள் நேற்று இடம்பெற்ற விபத்துக்களால் ஏற்பட்டவை என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன்,ஏனைய 03 மரணங்களும் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்களில் சிக்குண்டு உயிரிழந்த 08 பேரில் 03 பேர் பாதசாரிகள்,04 பேர் பயணிகள்,04 பேர் உந்துருளி சாரதிகள் என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.


















