கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட தென்னிலங்கையர் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.
குறித்த நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள் இவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைதான சந்தேகநபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .