கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்றையதினம் (04-05-2024) கொழும்பில் சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள யென் கடன் திட்டங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தை யோகோ கமிகாவா தெரிவித்தார்.
ஜூலை 2023 இல், இலங்கையின் அமைச்சரவையானது, முன்மொழியப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் பற்றிய விவாதங்களை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான காலவரையறையை முடிவு செய்ய பச்சைக்கொடி காட்டியது.
கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டதுடன், தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.