கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து இதுவரை ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,87,95,232 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியை தாண்டி உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,15,854 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,17,936 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 1,26,64,058 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,71,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




















