செத்தல் மிளகாயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் உள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வர்த்தகர் ஒருவரினால் 20 ஆயிரம் கிலோ கிராம் செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த செத்தல் மிளகாய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டநிலையில் அப்லரொக்ஸின் (Aflatoxin) என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் அதில் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு ஆலாசனையை வழங்கியுள்ளது.