இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளதால், ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் கடத்த 24 மணிநேரத்தில் 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்னிக்கை 1,22,21,665-ஆகி உயர்ந்துள்ளது.
அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 459 பேர் கொரோனாவால் இறந்துள்ளார். இதனால் இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,62,927-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 39,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் 5,563 பேரும், கடநாடகாவில் 4,000 பெரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக 22 நாளாக பாதிப்புகள் அதிகரித்துவருவதால் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் (caseload) என்னிக்கி 5,84,055-ஆகி உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 1,14,74,683 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். ஆனால், மீட்பு விகிதம் தற்போது 93.89 சதவீதமாக குறைந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.