இந்தியாவில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து திட்டமிட்டு தந்தையை கொலை செய்துள்ள சம்பவத்தின் பிண்ணனி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். அவருக்கு ஆஷா தேவி என்ற மனைவியும், அனுஜ் என்ற மகனும் அல்பனா எனும் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், அனுஜ் தனது தந்தையின் சொத்துக்களை தனக்கு எழுதிவைக்க கேட்டுள்ளார், அதேபோல் மகள் அல்பனா தனது காதலனை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளனர். ஆனால், சுனில் குமார் இருவரின் விருப்பத்துக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இருவரின் ஆசைக்கும் தடையாக இருந்த தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அனுஜ், அல்பனா மற்றும் அவரது காதலன் ஆகியோர் மற்றோரு நன்பரின் உதவியுடன் சுனில் குமாரை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பிறகு தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அவர்களே பொலிஸில் தந்தையை காணவில்லை என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் சுனில் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்திவந்தனர்.
சுனில் குமார் சமீபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சொத்தை விற்றுள்ளதையும், அப்போது அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையும் பொலிஸ் தெரிந்துகொண்ண்டார்.
பின்னர், அனுஜ் மற்றும் அல்பனா மீது சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அனுஜ், அல்பனா உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், காதலனை திருமணம் செய்துகொள்ள மகளும் சேர்ந்து சொந்த தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.