கொரோனா நெருக்கடியைத் தடுப்பதற்கான புதிய வரையறுக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் ஒரு பகுதியாக பிரான்சில் பூங்காக்கள் மற்றும் பிற வெளிப்புற பொது இடங்களில் மது பானங்கள் குடிக்க தடை என்று பிரதமர் Jean Castex அறிவித்தார்.
நேற்று பிரான்சில் 3வது பொது முடக்கத்தை அறிவித்த ஜனாதிபதி மக்ரோன், புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் Castex, ஆற்றங்கரைகளில் அல்லது சதுரங்களில் ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் அதிகாரிகள் விரைந்து அந்த குழுக்களை கலைக்க வேண்டும் என கூறினார்.
விதிகளை மதிக்காத மக்களை கண்டிப்பதாகவும், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரகசிய பார்ட்டி அமைப்பாளர்களை வழக்கறிஞர்கள் முறையாக விசாரிக்க வேண்டும் என Castex கூறினார்.
பள்ளி மதிய உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு உதவும் வகையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இனி நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.