தமிழகத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் லீலாவதி (13). அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் படித்து வந்தார்.
மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு லீலாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து மாணவி லீலாவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.