பிரித்தானியாவில் அஸ்ட்ராஜெனேகாவின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 7 பேர் இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 24-ஆம் திகதி வரை அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற சுமார் 18 மில்லியன் மக்களில் 30 பேருக்கு இரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது.
அதில் இதுவரை 7 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக்க பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு குழு MHRA அறிவித்துள்ளது.
அவை வெறும் தற்செயலா அல்லது தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பாதிக்கப்பட்ட 30 பேரில் 22 பேர் Cerebral Venous Sinus Thrombosis (CVST) எனும் மூளையில் இரத்தம் உறையும் அறிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மிக மிக குறைந்த பாதிப்பு என்றாலும், மக்களுக்கும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை அங்கீகரித்த மற்ற நாடுகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசியால் ஆபத்து இருக்கிறது என ஒருபுறம் நிரூபிக்கப்படாமல் கூறப்பட்டாலும், அதைவிட அதனால் ஏற்படும் நன்மைகள் மிக மிக அதிகமாக இருப்பதால் அஸ்ட்ராஜெனேகாவை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதற்கிடையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மிகவும் அரிதான இரத்தக் கட்டிகளை உண்டாக்குகிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் European Medical Agency, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் ஆனால் ஏதேனும் சூழ்நிலையில் அப்படி நடக்க சாத்தியமானது என்று கூறியது.