தனியார் ஊடகம் வெளிப்படுத்தலுக்கு அமைய இலங்கை தர நிர்ணய நிறுவக பணிப்பாளர் நாயகம் சித்திகா சேனாரத்ன தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் ஏற்படக் கூடிய வகையிலான பதார்த்தம் அடங்கிய மேலும் சில உணவு பொருட்கள் தொடர்பில தகவல் வெளியிட முடியாது என அண்மையில் தனியார் ஊடகம் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இலங்கை தர நிர்ணய பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த நிறுவனங்கள் தொடர்பில் தகவல் வெளியிடுமாறு சிங்ஹலே அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புகள் இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேராவிடம் வினவியிருந்தன.
அதற்கு பதிலளித்த அவர் அது குறித்த விபரங்களை இன்றைய தினம் வழங்குவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.