புகைப் பிடிப்பதால் உடல் நலத்திற்கு பலவிதமான நோய்கள்ளும், கேன்சரும் உண்டாகிறது.
மேலும், சிகரெட் புகைப்பது நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும்.
எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.
இரவில் தூங்கி எழுந்த பிறகும் உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு சில சமயம் ஏற்படும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய சோர்வு நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பின் புகை பழக்கத்திற்கு அடிமையாவது தூக்கத்தை பாதிக்கும். அப்படி தூக்கமின்மையால் அவதிப்பட்டால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும்.
புகைப்பழக்கம் முடியையும் பாதிக்கும். புகையிலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் மயிர்க்கால்களில் இருக்கும் டி.என்.ஏ.வை சேதப்படுத்திவிடும். புகைப்பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் முடி மெலிந்து வலுவிழந்து காணப்படும்.
மேலும், விரைவில் நரை முடி பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். புகைப்பிடிப்பவர்களின் முடி அதிகமாக உதிரும். அதனால் அவர்களுக்கு விரைவில் வழுக்கையாகிவிடும்.
புகைப்பிடிப்பவரின் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் அதனை சரிப்படுத்த முடியாது. அவர்களுக்கு முக அறுவைசிகிச்சை மேற்கொள்வது கூட கடினமானது.
சிகரெட் புகைப்பது பசியை கட்டுப்படுத்தும். மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும்.
அப்படி உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்வது நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உண்டாக்கும்.
புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு வயது அதிகமான தோற்றம் உருவாகிவிடும். அத்துடன் சரும திசுக்கள் மென்மையாகவும்,
ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் ரத்த வினியோகத்தை புகைப்பழக்கம் தடை செய்துவிடும்.