முன்னணி இணையத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் தரவுகள் கசிவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இப் பிரச்சினைக்கு பேஸ்புக் நிறுவனமும் முகங்கொடுத்து வருகின்றது.
இப்படியான நிலையில் தற்போது சுமார் 533 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 6 மில்லியன் வரையான இந்திய பயனர்களின் தரவுகளும் கசிந்துள்ளன.
இச் சம்பவத்தினை Alon Gal எனும் இணையப் பாதுகாப்பு ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட தரவுகளில் முழுப் பெயர், பேஸ்புக் ஐடி, தொலைபேசி இலக்கம், இருப்பிடம், மின்னஞ்சல் முகவரி உட்பட மேலும் பல தகவல்கள் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.