தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு மட்டுமே 5000 ஆயிரத்தை தற்போது கடந்திருக்கிறது.
மேலும், பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால், புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்க நேரிடும்.
மேலும், ஒரு காலவரையறைக்குள் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 3000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.