கொரோனா தொற்றுநோய் இலங்கையிலும், உலகளவிலும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது.
சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நவிந்த சொய்சா கூறுகையில்,
சிலர் சமூக இடைவெளி தொடர்பில் கவனம் செலுத்தவில்லை, சரியான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
வரவிருக்கும் பண்டிகை காலங்களில், கொழும்பிலிருந்து செல்லும் பயணங்களை குறைக்க மக்கள் கவனமெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், மற்றொரு போக்குவரத்து தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.