நாளை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் வணிகத்திற்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 13-14 திகதிகளில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு நாளை சிறப்பு பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்தது.
இதேவேளை , தங்கள் அலுவலகங்களும் நாளை பொது மக்களின் சேவைக்காக திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.



















