பதுளை – ஹாலிஎல அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளையில் இருந்து கண்டிக்குச் செல்லும் சரக்கு ரயிலே தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதை சீர்செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதனால், புறப்படும் சில ரயில்கள் பண்டாரவலை ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டியிருக்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த ரயிலின் இயந்திர பகுதியே தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















