கீரையில், நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளன.
கீரையில் பல சத்துக்களும், ஆன்டி ஆக்சிடண்ட்களும் உள்ளன. இத்தனை சத்துகள் நிறைந்து இருந்தாலும், நாம் இதை அளவாகவே பயன்படுத்துதல் வேண்டும்.
ஏனெனில் உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், நமது உடலில் பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இதை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால், அது நமது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. ஆக்சலேட் படிந்துள்ளதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலைக்கு, ஹைபர் ஆக்ஸலூரியா என்று பெயர்.
- பச்சிளம் குழந்தைகளுக்கு கீரை வகைகளை அதிகம் சாப்பிட கொடுத்தால், அவர்களுக்கு செரிமான பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
- குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடன், கீரையில் உள்ள வைட்டமின் கே இணைந்து, ரத்த அழுத்தத்தை மிகவும் குறைந்த அளவு கொண்டதாக மாற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.
- நமது உணவில், அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.
- கீரை வகைகளில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், அது செரிமானம் ஆக நீண்ட நேரம் பிடிக்கிறது. இது செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆவதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்பட காரணமாக அமைகிறது.
எந்தெந்த நேரத்தில் சாப்பிடலாம்?
மதிய உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், மாலைநேரத்தில், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ் போன்ற சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
இரவு உணவில், கீரை வகைகளை எடுத்துக் கொண்டால், இரவு நேர உறக்கம் சிறப்பானதாக இருக்கும்.