முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக LG விளங்குகின்றது.
இந்நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பிலும் கொடிகட்டிப் பறந்து வந்தது.
எனினும் சாம்சுங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ள முடியாத நிலையில் காணப்பட்டுவந்தது.
இப்படியான நிலையில் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியினை நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தனது உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
முன்னர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது அக் கைப்பேசி வடிவமைப்பினையும் முற்றாக நிறுத்தவுள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Brain Kwon உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.