கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு நபரொருவர் பொல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொத்மலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாமனார் மற்றும் மருமகனிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் மருமகன் மீது மாமனார் பொல்லால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கொத்மலை காவல்நிலையத்தினர் தெரிவித்தனர்.
வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கொத்மலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நீதிவான் விசாரணைகளின் பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொத்மலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.