ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




















